யூரியா உரம் விற்பனை செய்து பெறப்பட்ட வருமானத்திலேயே அரச ஊழியர்களுக்கு டிசம்பர் மாத சம்பளம் வழங்கப்பட்டதாக விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
விவசாய அபிவிருத்தி திணைக்களம் கடந்த மாதங்களில் யூரியா உரங்கள் மற்றும் ஏனைய உரங்களை விற்பனை செய்து 10.05 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இந்த பணம் திறைசேரிக்கு அனுப்பப்பட்டதாகவும், கடந்த டிசம்பரில் அந்த பணத்தில் ஒரு பகுதியை அரசு ஊழியர்களுக்கு உரிய சம்பளம் வழங்க அரசு பயன்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
விவசாய அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இந்த விடயங்களை வெளிப்படுத்தினார்.