Monday, December 22, 2025
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டு7 மீன்பிடி படகுகள் தீக்கிரை

7 மீன்பிடி படகுகள் தீக்கிரை

கொழும்பு – முகத்துவாரம் – லெல்லம மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 7 சிறிய மீன்பிடி படகுகள் தீக்கிரையாகியுள்ளன.

இன்று (11) அதிகாலை ஏற்பட்ட இந்த தீ விபத்தில் இரண்டு படகு இயந்திரங்கள் மற்றும் மீன்பிடி சாதனங்களும் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் மற்றும் முகத்துவாரம் பொலிஸாரும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத அதேவேளை, விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles