முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ உட்பட நான்கு இலங்கையர்கள் மீது கனடா இலக்கு பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க மற்றும் லெப்டினன்ட் கமாண்டர் சந்தன ஹெட்டியாராச்சி ஆகியோருக்கும் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில், 1983 முதல் 2009 வரை முழுமையாக மனித உரிமைகளை மீறப்படுவதற்கு பொறுப்பான நான்கு இலங்கை அரச அதிகாரிகளுக்கு எதிராக விசேட பொருளாதார நடவடிக்கைகள் சட்டத்தின் விதிகளின் கீழ் இலக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கனேடிய அரசாங்கத்தின் அறிக்கை ஒன்றில், கனேடிய வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி இதனை அறிவித்துள்ளார்.
இதன்படி தடை செய்யப்பட்டவர்களுக்கு கனடாவில் பிரவேசிக்கும் உரிமை மறுக்கப்படுகிறது.