அடுத்த மாத ஆரம்பத்தில் நிலவக்கூடிய பயணிகளின் கொள்ளளவுக்கு ஏற்ப ரயில் சேவைகளுக்கான புதிய கால அட்டவணையை தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் விவகார அமைச்சின் ஆலோசனை சபை அறிவித்துள்ளது.
பணியாளர்கள் ஓய்வுப் பெற்று செல்கின்றமை காரணமாக ரத்தாகக்கூடிய ரயில் சேவைகளை மீளமைப்பதற்கான பணிகளை இந்த மாத இறுதிக்குள் தயார்படுத்தவுள்ளதாக திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த வருட இறுதியில் 10 ரயில் ஓட்டுநர்கள் மட்டுமே ஓய்வு பெற்றுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அதிகளவான உல்லாசப் பயணிகள் வருகை தருவதனால் எரிபொருள் விநியோகத்திற்காக அண்மைய நாட்களில் அதிகமான ரயில்களை ஈடுபடுத்த வேண்டியுள்ளதாகவும், இதனால் பயணிகள் ரயில் சேவைகளை ஓரளவு குறைக்க வேண்டியுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.