Monday, November 18, 2024
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசெயலாளரிடம் விளக்கம் கோரும் தேர்தல்கள் ஆணைக்குழு

செயலாளரிடம் விளக்கம் கோரும் தேர்தல்கள் ஆணைக்குழு

பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் ஹப்புஹின்னவிடம் விளக்கம் கோரவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

உத்தேச உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களிடமிருந்து கட்டுப்பணத்தை பெற வேண்டாம் என மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு வழங்கிய பணிப்புரை தொடர்பில் அதன்போது விளக்கம் கோரவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி, அரசியல் கட்சிகள் மற்றும் சயேச்சை குழுக்களின் வேட்பாளர்களிடமிருந்து கட்டுப்பணத்தை அறிவிட வேண்டாமென நேற்றைய தினம் பொதுநிர்வாக அமைச்சின் செலாளர் நீல் ஹபுஹின்ன மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

இந்தநிலையில், அரசியலமைப்பின் பிரகாரம் தேர்தல் அலுவலர்களுக்கு அத்தகைய பணிப்புரை விடுக்க தேர்தல் ஆணைக்குழுவன்றி வேறு எவருக்கும் அதிகாரமில்லையென தேர்தல் ஆணைக்குழு தலைவர் தெரிவித்திருந்தார்.

இவ்வாறானதொரு நிலையில் பொதுநிர்வாக அமைச்சின் செயலாளரின் குறித்த பணிப்புரை மீளப்பெறப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் விடுத்த பணிப்புரை குறித்து அவரிடம் விளக்கம் கோரவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles