கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கும் மிருசுவில் படுகொலை குற்றவாளி சுனில் ரத்நாயக்க உள்ளிட்ட இரண்டு இராணுவத்தினருக்கு கனடா நேற்று (10) பொருளாதாரத் தடையை அறிவித்தது.
இதற்கு இலங்கை அரசாங்கம் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளது.
இதன்நிமித்தம் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகரை வெளிவிவகார அமைச்சுக்கு அழைத்து, தமது இராஜதந்திர அதிருப்தியை வெளிப்படுத்தி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
1983 – 2009 வரையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பாளிகள் என்ற அடிப்படையில் கனடாவினால் இந்த பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Hiru News