இலங்கை, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளினால் அந்நாடுகளில் வறுமை அதிகரித்துள்ளதாக உலக வங்கியின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
இதனால் அந்நாடுகளில் உள்ள குடும்பங்கள் சத்தான உணவுகளை உட்கொள்வதை குறைத்து, மின்வெட்டுக்கு பழகிவிட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் போர்இ உணவு மற்றும் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு மற்றும் மத்திய வங்கிகளுக்கான உயர் பணவீக்கம் ஆகியவை தெற்காசியாவின் பொருளாதாரங்களை நெருக்கடிக்கு தள்ளியுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
இதனால் வர்த்தகம் மற்றும் உற்பத்தி சுருங்கி, அந்த நாடுகளில் உள்ள குடும்பங்களின் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி காரணமாக சில நாடுகள் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், ஏனைய நாடுகள் கடுமையான நிதிக் கொள்கையை கடைப்பிடித்து இறக்குமதி கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாகவும் அறிக்கை காட்டுகிறது.
வெளிநாட்டுக் கடனை செலுத்துவதற்கும் உணவு மற்றும் எரிபொருளை இறக்குமதி செய்வதற்கும் வெளிநாட்டு இருப்புக்கள் இல்லாத இலங்கையின் பொருளாதாரம் கடந்த ஆண்டு 9.2 வீதத்தால் வீழ்ச்சியடைந்ததுடன், இந்த ஆண்டு 4.2 வீதத்தால் குறையும் என கணிக்கப்பட்டுள்ளதாக Global Economic Prospects கூறுகிறது.
#Lankadeepa