எதிர்வரும் சனிக்கிழமை முதல் முட்டை ஒன்றின் மொத்த விலையை ஐந்து ரூபாவால் குறைக்க அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் சனிக்கிழமை முதல் 45 ரூபா என்ற மொத்த விலைக்கு முட்டை விற்பனை செய்யப்படவுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் என்டன் நிஷாந்த அப்புஹாமி தெரிவித்துள்ளார்.
முட்டை உற்பத்தியாளர்கள் பாரவூர்திகள் மூலம் முட்டையை விற்பனை செய்யும் பின்னணியில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.