Friday, November 15, 2024
24 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின் கட்டண உயர்வை ஏற்க முடியாது - ஜனக்க ரத்நாயக்க

மின் கட்டண உயர்வை ஏற்க முடியாது – ஜனக்க ரத்நாயக்க

மின்சாரக் கட்டண உயர்வை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இலங்கை மின்சார சபை கடந்த சில வருடங்களாக பாரிய நட்டத்தைச் சந்திக்கவில்லை எனவும் அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

6.9 மில்லியன் மின் பாவனையாளர்கள் கையொப்பமிட்ட பொது மனுவை நேற்று தனது அலுவலகத்தில் ஏற்றுக்கொண்ட ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க, குறைந்தபட்சம் 35 பில்லியன் ரூபா மின்சார சபையில் இருந்து மறைமுகமாக வெளியேறுவதாக குறிப்பிட்டார்.

இந்தநிலையில் 35 பில்லியன் ரூபா நட்டம் என்று கூறப்படுவதற்கான முக்கிய காரணமாக, நிர்வாகத்தை துல்லியமாக நிர்வகிக்க இயலாமையே ஆகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு மெட்ரிக் டன் நிலக்கரியை மதிப்பிடும்போது, 90 டொலர் விலை வித்தியாசம் உள்ளது.

இந்தக் கணக்கீட்டில் பிழை உள்ளது என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதன் விளைவாக, தவறான மதிப்புகளின் அடிப்படையில் மின்சாரக் கட்டண உயர்வை நிராகரிப்பதற்கு தமது ஆணைக்குழுவுக்கு முழு அதிகாரம் உள்ளது என்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles