எரிபொருள் விலை சூத்திரத்திற்கு இணையான விலை சூத்திரத்தை மின் கட்டணத்திற்கும் அறிமுகப்படுத்துமாறு மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சருக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 2023 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் திகதி முதல் உத்தேச மின்சார கட்டணங்களை திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இது தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுடன் மேலும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.