தீவிர வலதுசாரி ஆட்சியாளராக கருதப்படும் பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வயிற்று வலி காரணமாக அவர் புளோரிடாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த வார இறுதியில், அவரது ஆதரவாளர்கள் சுமார் 1500 பேர் தலைநகரில் உள்ள உச்ச நீதிமன்றம் மற்றும் ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட முக்கிய கட்டிடங்களை தாக்கி குழப்பமான சூழ்நிலையை உருவாக்கினர்.
அக்டோபர் தேர்தலில் போல்சனாரோவை தோற்கடித்து ஜனவரி முதலாம் திகதி அதிகாரத்தை கைப்பற்றிய இடதுசாரி ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, இதற்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
கிளர்ச்சியாளர்கள் ஜனநாயகத்தை கவிழ்க்க முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
அரசாங்க நிறுவனங்கள் மீதான மிக மோசமான தாக்குதலில், காங்கிரஸையும், உச்ச நீதிமன்றத்தையும், ஜனாதிபதி அலுவலகத்தையும் தாக்கிய கும்பல், ஜன்னல்கள், தளபாடங்கள் மற்றும் கலைப்படைப்புகளை அடித்து நொறுக்கியது.
பதவிக்காலம் முடிவதற்கு சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவிற்கு தப்பி ஓடிய போல்சனாரோ, 2018 தேர்தல் பிரச்சாரத்தின் போது கத்தியால் குத்தப்பட்டதால் ஏற்பட்ட வயிற்று வலி காரணமாக திங்களன்று ஆர்லாண்டோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதிக்கு குடல் அடைப்பு இருப்பதாகவும், அது தீவிரமானதல்ல என்றும், அறுவை சிகிச்சை தேவையில்லை என்றும் அவரது மருத்துவர் தெரிவித்துள்ளார்.