Wednesday, September 17, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதினேஷ் ஷாப்டரின் மரணம் தற்கொலையல்ல!

தினேஷ் ஷாப்டரின் மரணம் தற்கொலையல்ல!

பிரபல வர்த்தகரான தினேஷ் ஷாப்டரின் மரணம் தற்கொலை என உறுதி செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் சுமார் 175 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

‘இந்த மரணம் தற்கொலை என்பதற்கான சான்றோ உறுதிப்பாடோ இல்லை. மேலதிக விசாரணைகள் நடந்து வருகின்றன. இந்த கட்டத்தில், சுமார் 175 வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 14 வழக்குகள் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும் தொலைபேசி பகுப்பாய்வு, வங்கி பதிவுகள் மற்றும் பெற வேண்டிய பல்வேறு ஆவணங்கள் பெறப்படுகின்றன’ என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles