Tuesday, July 22, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகோட்டாபய உட்பட 39 பேருக்கு எதிரான அடிப்படை உரிமை மனுக்கள் பரிசீலனை

கோட்டாபய உட்பட 39 பேருக்கு எதிரான அடிப்படை உரிமை மனுக்கள் பரிசீலனை

நாட்டின் பொருளாதாரம் சீர்குலைவதற்கு காரணமான தீர்மானங்களை எடுத்த முன்னாள் ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர் உள்ளிட்ட 39 பேரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டு தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மனுக்கள் நேற்று(09) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

மத்திய வங்கியின் நாணய சபையை பிரதிநிதித்துவப்படுத்திய ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜீவ ஜயவர்தன மற்றும் ராணி ஜயமஹ ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மீண்டும் அறிவித்தல் அனுப்பிவைக்குமாறு பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் குறித்த இருவரும் நேற்று(09) மன்றில் ஆஜராகியிருக்கவில்லை.

மனுக்கள் மீதான மேலதிக பரிசீலனை எதிர்வரும் மார்ச் மாதம் 20ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இலங்கை வணிக சபையின் முன்னாள் தலைவரான சந்திரா ஜயரத்ன, நீச்சல் வீரர் ஜுலியன் போலின், திறந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி மஹீம் மென்டிஸ் மற்றும் ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் நிறுவனத்தால் இந்த அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles