கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பயணி ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இன்று (10) காலை கட்டாரில் இருந்து வந்த நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கனடாவில் வசிக்கும் 55 வயதான இவர் புறக்கோட்டை பிரதேசத்தில் உள்ள தனது உறவினர்களை சந்திப்பதற்காக வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.