இரத்தினபுரி மாவட்டத்தில் ஐந்து வயதுக்குட்பட்ட 1336 சிறுவர்கள் கடுமையான போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
இவர்களில் 838 பிள்ளைகள் பொருளாதார சிரமங்களுக்கு உள்ளான குடும்பங்களின் பிள்ளைகள் மற்றும் இரத்த சோகையால் (இரத்தமின்மை) பாதிக்கப்பட்ட 4351 கர்ப்பிணித் தாய்மார்களும் இரத்தினபுரி மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடுமையான போசாக்கின்மையால் பாதிக்கப்பட்ட சிறுவர்களில் அதிகமானோர் (315) கொடகவெல பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பது விசேட அம்சமாகும்.
இரத்தினபுரி பிரதேச செயலர் பிரிவில் 148 போசாக்கு குறைபாடுள்ள சிறுவர்களும், குருவிட்ட பிரதேச செயலர் பிரிவில் 121 பேரும், பாலமடுல்ல பிரதேச செயலர் பிரிவில் 105 பேரும், கொலன்னா பிரதேச செயலர் பிரிவில் 98 பேரும் இனங்காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
#Lankadeepa