Thursday, July 24, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇந்தியாவின் உயர் விருதை பெற்றார் குமார் நடேசன்

இந்தியாவின் உயர் விருதை பெற்றார் குமார் நடேசன்

வெளிநாட்டுவாழ் இந்தியர்களுக்கு வழங்கப்படும் உயரிய கெளரவமான பிரவாசி பாரதீய சம்மான் விருது வழங்கும் வைபவம் இன்று (10) மத்திய பிரதேசத்திலுள்ள இந்தூரில் இடம்பெற்று வருகின்றது.

இந்நிகழ்வில் வெவ்வேறு நாடுகளில் வாழும் 3,500 வெளிநாடு வாழ் இந்தியர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

17ஆவது தடவையாக வழங்கப்படும் இந்த விருதுகள் வெளிநாடுகளில் வாழும் இந்திய வம்சாவளி தனிநபர்கள், இந்தியாவில் வசிக்காத இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளி தனிநபர்கள் ஆகியோரால் ஸ்தாபிக்கப்பட்டு செயற்படுத்தப்படும் அமைப்புகள் மற்றும் நிறுவனங்களுக்கு இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் அவர்கள் மேற்கொண்ட சிறந்த சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படுகின்றன.

இந்நிகழ்வில் சமூக சேவையாளரும் ஊடகத்துறைசார் பிரதிநிதியும் வீரகேசரி பத்திரிகையை வெளியிடும் எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்ர்ஸ் சிலோன் லிமிட்டெட்டின் நிர்வாக இயக்குநருமான குமார் நடேசனுக்கும் பிரவாசி பாரதீய சம்மான் விருது வழங்கப்பட்டது . அவர் ஆற்றி வரும் சமூக சேவைகளை கௌரவிக்கும் வகையில் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு இவ்விருதை வழங்கி வைத்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles