திறைசேரி தற்போது பாரிய நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக ஜனாதிபதி அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்படி ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுவதில் பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், சமுர்த்தி கொடுப்பனவை வழங்குவதில் இரண்டு வாரங்கள் தாமதம் ஏற்படலாம் எனவும் தெரிவித்தார்.