Wednesday, July 23, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டு12,000 பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைக்க நடவடிக்கை

12,000 பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைக்க நடவடிக்கை

தற்போது நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக உடனடியாக 12 ஆயிரம் பட்டதாரிகளை சேவையில் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான போட்டிப் பரீட்சை அடுத்த வாரம் நடத்தப்படவுள்ளது.

அத்துடன் இதற்கான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் எம்.என். ரணசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போது பாடசாலைகளில் இணைக்கப்பட்டுள்ள பட்டதாரிகள் உட்பட அரச சேவையிலுள்ள 40 வயதுக்குட்பட்ட பட்டதாரிகள் இதற்காக விண்ணப்பிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

விஞ்ஞானம், கணிதம்,தொழில்நுட்பம் மற்றும் அழகியல் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. இதறக்மைய போட்டிப் பரீட்சையை விரைவாக நடத்தி ஏப்ரல் மாதத்துக்கு முன்னதாக புதிய ஆசிரியர் களை சேவையில் இணைத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles