Friday, July 25, 2025
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுச்சக்கர வண்டியில் கைவிடப்பட்டிருந்த நிலையில் பச்சிளம் சிசு மீட்பு

முச்சக்கர வண்டியில் கைவிடப்பட்டிருந்த நிலையில் பச்சிளம் சிசு மீட்பு

வீதியில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டியொன்றில் கைவிடப்பட்ட நிலையில் சிசுவொன்று மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

பிறந்து 10 நாட்களேயானதென கருதப்படும் பெண் சிசுவொன்றே இன்று (9) காலை இவ்வாறு உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.

தலவாக்கலை பகுதியில் இரவு வேளையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியின் பின் இருக்கையில் குறித்த சிசு கைவிடப்பட்டிருந்ததாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, குழந்தையை லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த பெண் குழந்தையை கைவிட்டுச் சென்ற தாயை கண்டறிய மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles