வவுனியா – குருமன்காடு பகுதியில் கிணற்றில் தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (08) காலை இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
வவுனியா குருமன்காடு பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கணவன் கிணற்றில் விழுந்து கிடப்பதைப் கண்ட மனைவி, பிரதேசவாசிகளுடன் இணைந்து அவரை மீட்டு சோதனையிட்டபோது, அவர் உயிரிழந்திருப்பது தெரியவந்தது.
பின்னர், இந்த சம்பவம் குறித்து அவரின் உறவினர் ஒருவர் பொலிஸில் புகார் அளித்தார்.
இறந்தவர் 10 வருடங்களாக மனநலம் பாதிக்கப்பட்டவர் என பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பிரேதப் பரிசோதனையில் இது நீரில் மூழ்கி மூச்சுத் திணறல் காரணமாக ஏற்பட்ட மரணம் எனத் தெரிவிக்கப்பட்டது
வைத்தியரால் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.