தேசிய கீதம் பாடும் போது தென் சூடான் ஜனாதிபதி சல்வா கர் தனது கால்சட்டையோடு சிறுநீர் கழிப்பதை படம் பிடித்ததற்காக 6 ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடக உரிமை குழுக்கள் தெரிவிக்கின்றன.
டிசம்பரில், ஒரு விழாவில் தேசிய கீதத்தின் போது சூடான் ஜனாதிபதி கீர் தனது பேண்ட்டில் சிறுநீர் கழிப்பதை போன்ற வீடியோ சமூக ஊடகங்களில் பரவியது. அது தொடர்பில் இவ்வாரம் அரச ஊடகப் பணியாளர்கள் 6 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கும் குழு (CPJ) அவர்களை விடுதலை செய்யக் கோரி வருகிறது.
தெற்கு சூடான் பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் தலைவர் பேட்ரிக் ஓயெட் ரொய்ட்டர்ஸிடம் கூறுகையில், “குறித்த வீடியோ எப்படி வெளியானது என்பது பற்றி பத்திரிகையாளர்கள் மீது சந்தேகம் எழுந்துள்ளது. தென் சூடான் ரேடியோ கோர்ப்பரேஷன் இந்த காட்சிகள் ஒருபோதும் ஒளிபரப்பப்படவில்லை என்று கூறுகிறது என தெரிவித்துள்ளார்.
தென் சூடானின் தகவல் அமைச்சர் Michael Makuei, Voice of America வானொலியிடம், ஊடகவியலாளர்கள் ஏன் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பதை அறிய பொதுமக்கள் காத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். .
ஊடகவியலாளர்களை துன்புறுத்துவதையும் அச்சுறுத்துவதையும் நிறுத்துமாறு உரிமைக் குழுக்கள் தென் சூடான் அதிகாரிகளை கேட்டுள்ளனர்.
ஆபிரிக்காவின் புதிய நாடான தென் சூடானின் முதல் ஜனாதிபதியாக கீர் 2011 இல் பதவியேற்றார்.
ஆனால் அதன் பின்னர், நாடு பல நெருக்கடிகளை எதிர்கொண்டமை குறிப்பிடத்தக்கது.