நாட்டின் ஏனைய தலைவர்களை விட வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தம்மை அதிகம் நம்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தாம் பேசும் ஆங்கிலம் சிலருக்குப் புரியவில்லை என்றாலும், வெளிநாட்டவர்களுக்கு நன்றாக புரியும் ஆங்கிலத்தை தான் பயன்படுத்துவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
எனவே வெளிநாட்டு உதவிகளை பெறுவதற்கு பொருத்தமான நபர் யார் என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அந்தத் திறன் இருப்பதாக பலர் நம்பினாலும், அவருக்கு அவ்வாறான திறன் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
நுகேகொட மகாமாயா கல்லூரிக்கு பேருந்து ஒன்றை அன்பளிப்பு செய்யும் நிகழ்வில் கலந்து கொண்ட போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதனைக் குறிப்பிட்டுள்ளார்.