அடைகாக்கப்படக்கூடிய 2 இலட்சம் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைச்சின் கால்நடைப் பிரிவுக்கு அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளார்.
மாதாந்த முட்டை உற்பத்தி, 30 மில்லியனாக குறைவதற்கு கால்நடை தீவன தட்டுப்பாடு மற்றும் தாய் கோழிகளின் வருடாந்த இறக்குமதி 80இ000 லிருந்து 40இ000 ஆக குறைந்துள்ளமையே காரணம் என விவசாய அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
அதற்கு தீர்வாக தாய் கோழிகளை இறக்குமதி செய்தால் முட்டை உற்பத்தி 11 மாதங்கள் தாமதமாகும் என்பதால் அதற்கு மாற்றாக அடைகாக்கப்படக்கூடிய முட்டைகளை இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.