Tuesday, July 29, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொழும்பு தேசிய வைத்தியசாலையில் சமையல்காரர்களுக்கு பற்றாக்குறை

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சமையல்காரர்களுக்கு பற்றாக்குறை

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சமையலறைகளில் சுமார் பதினைந்து சமையற்காரர் வெற்றிடங்கள் காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால் வைத்தியசாலையின் ஊழியர்கள் சமைப்பதில் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

தேசிய வைத்தியசாலையின் சமையலறையில் சுமார் இருபத்தைந்து சமையற்காரர்கள் பணிக்கமர்த்தப்பட்டுள்ளனர்.

எனினும் வைத்தியசாலையின் உள்நோயாளிகள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்களுக்கு உணவு சமைப்பதற்கு அந்த எண்ணிக்கை போதுமானதாக இல்லை.

வைத்தியசாலையில் சமையற்காரர்களை இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சை நடத்தப்பட்ட போதும் இதுவரை நியமனக் கடிதங்கள் வழங்கப்படவில்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக வைத்தியசாலையின் மூவாயிரம் உள்நோயாளிகள் மற்றும் சுமார் இரண்டாயிரம் வைத்தியசாலை ஊழியர்களுக்கு தினந்தோறும் சமைப்பதில் பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles