அதிகரித்து வரும் எச்.ஐ.வி தொற்று விகிதம் குறித்து காலி மாவட்ட சுகாதார அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
காலி மஹமோதர வைத்தியசாலையின் பால்வினை நோய் தடுப்புப் பிரிவின் வைத்திய அதிகாரி வைத்தியர் தர்ஷனி விஜேவிக்கிரமவின் கூற்றுப்படி, 2021 ஆம் ஆண்டில் 25 எச்ஐவி நோயாளிகளும் அதற்கு முந்தைய ஆண்டில் 36 பேரும் கண்டறியப்பட்டனர். இன்னும் கண்டறியப்படாத நிலையில் மேலும் நோயாளிகள் இருப்பார்கள் என்றும், அவர்களில் பெரும்பாலோர் 20 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டெம்பர் வரை நாட்டிலிருந்து 427 நபர்கள் பதிவாகியுள்ளதாகவும், 1986 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதல் எச்ஐவி தொற்று கண்டறியப்பட்டதில் இருந்து 4831 பேர் வரை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எய்ட்ஸ் ஆபத்தான வேகத்தில் பரவி வருவதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.