Monday, May 26, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுCPC ஊழியர்கள் போனஸ் பெற தகுதியானவர்கள் - பந்துல சமன் குமார

CPC ஊழியர்கள் போனஸ் பெற தகுதியானவர்கள் – பந்துல சமன் குமார

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதில் எந்த தடையும் இல்லை எனவும் மத்திய வங்கி முன்வைத்துள்ள வழிகாட்டல்களுக்கு அமைய போனஸ் செலுத்த முடியும் எனவும் பொதுஜன முற்போக்கு ஊழியர் சங்கத்தின் பெற்றோலிய கிளையின் தலைவர் பந்துல சமன் குமார தெரிவித்துள்ளார்.

அரச கூட்டுத்தாபன ஊழியர்களுக்கு போனஸ் வழங்கக் கூடாது என சுற்றறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை என அவர் கூறினார்.

மூன்று வருட கூட்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதால் அதில் எவ்வித சட்டப் பிரச்சினையும் இல்லை என அவர் குறிப்பிட்டார்.

கொவிட் பரவலின் போதும் பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் தமது சேவையை வழங்கியதால், போனஸ் கிடைக்க அவர்கள் தகுதியானவர்கள் என பந்துல மேலும் தெரிவித்தார்.

#Lankadeepa

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles