கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் இலங்கையில் வாகனங்களின் விலை கணிசமாக அதிகரித்திருந்தாலும், பல்வேறு காரணங்களால் தற்போது விலையில் வீழ்ச்சிப் போக்கு அவதானிக்கப்படுகிறது.
அண்மைக்காலமாக இறக்குமதி மீதான தடையை அரசாங்கம் தளர்த்தி வருகின்ற நிலையில்ஈ சிலவகையான பொருட்களுக்கு நேற்று மீண்டும் தற்காலிக தடை அமுலாக்கப்பட்டது.
எவ்வாறாயினும், வாகனங்களின் இறக்குமதி மீதான தடையை நீக்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக நிதியமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதற்கான வரிகளில் திருத்தம் மேற்கொண்டு, அரசாங்கத்துக்கு அதிக வருவாய் தரும் வகையில் குறிப்பிட்ட சில வகையான வாகனங்களை மாத்திரம் இறக்குமதி செய்வதற்கு அனுமதிப்பது குறித்து ஆராயப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.