Sunday, July 20, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமதுபோதையில் தாய் மீது தாக்குதல்: தந்தையின் தாக்குதலில் மகன் பலி

மதுபோதையில் தாய் மீது தாக்குதல்: தந்தையின் தாக்குதலில் மகன் பலி

மதுபோதையில் தாயை தாக்கியமைக்காக தமது தந்தையின் தாக்குதலுக்கு இலக்காகிய மகன் உயிரிழந்துள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வினுர விரஞ்சன என்ற இருபத்தைந்து வயது இளைஞனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞன் தனது தந்தை, தாய் மற்றும் சகோதரருடன் வசித்து வந்ததாகவும், 10 வருடங்களுக்கு முன்னர் வாகன விபத்தில் அவரது வலது கால் பகுதி அகற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் நாளாந்தம் மது போதையில் தமது குடும்பத்தாரை தாக்கி வந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவத்திற்கு முந்தைய நாள் இரவு குடித்துவிட்டு சென்று அவரது தாயை தாக்கிய போது, தந்தை தலையிட்டு குறித்த நபரை தாக்கியுள்ளார்.

இதன்போது கீழே விழுந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles