தற்போதைய நிலவரப்படி, எதிர்காலத்தில் நாட்டில் மற்றொரு கொவிட் அலை உருவாகுமானால், அது மிகவும் மோசமாகும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன எச்சரித்துள்ளார்.
நாட்டில் உள்ள மருந்துகள் மற்றும் அதிகாரிகளின் பற்றாக்குறையே அந்த நிலைமைக்கு முக்கிய காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பல நாடுகளில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பும் அதிகரித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் மீண்டும் ஒரு தொற்றுநோய் நிலைமை உருவாகினால் அதனைக் கட்டுப்படுத்துவது கடினமாகும்.
சுகாதார சேவைகள் சரிவு, மருந்துகள் – மருத்துவமனை வசதிகள் மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறை ஆகியவற்றுடன் நிலைமை மோசமாகக்கூடும் என அவர் எச்சரித்தார்.
இதன் காரணமாக, கொவிட் பரவினால், ஒரு துரதிர்ஷ்டவசமான சூழ்நிலை உருவாகும்.
அவ்வாறான நிலையை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கான வசதிகளை ஏற்படுத்துமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் கேட்டுக்கொண்டார்.