Saturday, November 16, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபணவீக்கம் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது - மத்திய வங்கி

பணவீக்கம் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது – மத்திய வங்கி

எதிர்கால நாணய, நிதியியல் துறை கொள்கைகள் தொடர்பாக இலங்கை மத்திய வங்கி நேற்று ஊடக அறிக்கையொன்றை விடுத்துள்ளது.

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல், 2020 ஆம் ஆண்டில் பரவிய கொரோனா தொற்று காரணமாக 2021 ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட அழுத்தங்கள் தொடர்பில் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2022 ஆம் அண்டு நடைபெற்ற சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள், முன்னொருபோதும் இல்லாத கொள்கை மாற்றங்கள் காரணமாக எழுந்த பொருளாதார சவால்களால் தனிநபர்களும் வியாபாரங்களும் கற்பனை செய்ய முடியாத அளவு இன்னல்களை சந்திக்க நேரிட்டதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலையில், பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளையும் இலங்கை மத்திய வங்கி தௌிவுபடுத்தியுள்ளது.

2022 ஆம் ஆண்டு சுமார் 8 வீதத்தால் நாட்டின் பொருளாதாரம் சுருங்கும் என சுட்டிக்காட்டியுள்ள மத்திய வங்கி, 2023 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இருந்து பொருளாதாரம் படிப்படியாக வழமைக்கு திரும்பி, தொடர்ச்சியான வளர்ச்சி வேகத்தை பேண முடியும் என நம்பிக்கை வௌியிட்டுள்ளது.

இலங்கைக்கு கடன் வழங்கும் தரப்பினருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் ஊடாக கிடைத்துள்ள முன்னேற்றம் காரணமாக சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதி இந்த வருட முற்பகுதியில் கிடைக்கும் என எதிர்ப்பார்ப்பதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

உத்தேச பண வீக்கம் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருவதால், பண வீக்கம் கட்டுப்பாட்டுக்குள் வருவதாகவும் மத்திய வங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles