Saturday, July 5, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநீண்ட நேர மின்வெட்டுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை

நீண்ட நேர மின்வெட்டுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை

நாட்டின் தற்போதைய நிலைமைக்கு ஏற்ப 8-10 மணித்தியாலங்களுக்கு மின்துண்டிப்பு அவசியமில்லை என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

போதிய நிலக்கரி இருப்புக்கள் கிடைப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மின்சார சபை நிர்வாகத்தில் ஏற்படும் தவறுகளால் ஏற்படும் நஷ்டத்தை ஈடு செய்யவும், நிலக்கரி, எரிபொருள் பெற தேவையான பணத்தை திரட்டவும் மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.

இந்நேரம் எங்களிடம் 32,000 மெட்ரிக் டன் நிலக்கரி கையிருப்பில் உள்ளது.அடுத்த கப்பல் நாளை இலங்கைக்கு வரும்.நாளை நண்பகலில் மேலும் 60,000 மெட்ரிக் டன் நிலக்கரி கிடைக்கும். மேலும் 5 கப்பல்கள் வரவுள்ளன. தற்போதைய நிலவரப்படி சுமார் 25 கப்பல்கள் நாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிலக்கரி பற்றாக்குறையால் மூடப்பட்ட மின்னுற்பத்தி நிலையம் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் செயல்படத் தயாராகி வருகிறது.

அதன்படி, எதிர்காலத்தில்8-10 மணி நேரம் மின்வெட்டுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles