அரசியல்சம்பந்தனை சந்தித்தார் மஹிந்த (Photos)

சம்பந்தனை சந்தித்தார் மஹிந்த (Photos)

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது, ​​ வடக்கு, கிழக்கில் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் தமிழ்த் தேசியப் பிரச்சினைகளை முன்வைத்த சம்பந்தன், வடகிழக்கு பிரச்சினைக்கு அரசாங்கம் விரைவில் தீர்வு காண வேண்டும் என கூறினார்.

இந்த பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்துடன் கலந்துரையாடி சுமுக தீர்வை எட்ட முயற்சிப்பதாக, மஹிந்த ராஜபக்ஷ, சம்பந்தனிடம் உறுதியளித்தார்.

அதேநேரம் அடுத்தவாரம் நடைபெறவுள்ள மூன்று நாள் சர்வகட்சி மாநாட்டில் தனது கட்சியான SLPPயும் கலந்துகொள்ளும் என்றும், அதன்பின் அதன் முன்மொழிவுகளை சாதகமான முறையில் ஆய்வு செய்யும் என்றும் மஹிந்த கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles