Tuesday, May 20, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொள்கலன் போக்குவரத்து கட்டணம் குறைந்தது

கொள்கலன் போக்குவரத்து கட்டணம் குறைந்தது

எரிபொருள் விலை குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை 2.5 வீதத்தால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் கொள்கலன் போக்குவரத்து கட்டணங்கள் குறைக்கப்படும் என அகில இலங்கை கொள்கலன் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களாக ஒட்டோ டீசல் விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டு சில சந்தர்ப்பங்களில் குறைக்கப்பட்டதாக சங்கம் குறிப்பிட்டுள்ளது.

எரிபொருள் விலைக் குறைப்பின் நன்மை நுகர்வோருக்கு வழங்கப்பட வேண்டுமென்பதனால், இறக்குமதி மற்றும் ஏற்றுமதித் துறையினருக்கு அறிவித்ததன் பின்னர், கொள்கலன் போக்குவரத்துக் கட்டணங்களை 2.5 வீதத்தினால் குறைக்கவுள்ளதாக அகில இலங்கை ஐக்கிய கொள்கலன் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles