முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து முட்டையின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது.
நாரஹேன்பிட்ட, வெலிசர மற்றும் பொகுந்தர உட்பட பல பிரதேசங்களில் உள்ள பொருளாதார நிலையங்களில் முட்டை விலை 55 ரூபாவாக குறைந்துள்ளது.
இந்த வார அமைச்சரவைக் கூட்டத்தின் போது, வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ, முட்டையின் விலை தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில், அவற்றை இறக்குமதி செய்வதற்கான யோசனையொன்றை சமர்ப்பித்தார்.
இதன்படி, தேவை ஏற்பட்டால் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியது.
எனினும், வர்த்தக அமைச்சர் தமது தொழிலை அழிக்க முயற்சிப்பதாக முட்டை உற்பத்தியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஒரு முட்டைக்கு 2 ரூபா மட்டுமே இலாபமாக கிடைப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
#News Radio