7 சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்கள் மற்றும் ஐந்து பிரதி பொலிஸ்மா அதிபர்கள் உட்பட மொத்தம் 64 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், 19 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், பிரதி பொலிஸ்மா அதிபர்களாக உடனடியாக அமுலுக்கு வரும் வகையில்இ பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்னவினால் பதவி உயர்தப்பட்டுள்ளனர்.
இடமாற்றம் செய்யப்பட்டவர்கள்இ தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் (NPஊ) அனுமதியின் கீழ் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரால் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.
சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தனவை நிர்வாகத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் பதவிக்கு நியமிக்க பொதுச் சேவைகள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
வட மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய மாகாணத்தில் கடமையாற்றிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன சப்ரகமுவ மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எஸ்.சி.மெதவத்த தேசிய பொலிஸ் பயிற்சி நிறுவனத்தில் இருந்து துணை சேவைகளுக்கான பொலிஸ் தலைமையகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேலும், வடமத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் கித்சிறி ஜயலத் கிழக்கு மாகாணத்திற்கும், கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.டி.ஆர்.எஸ்.தமிந்த வடமத்திய மாகாணத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.