Sunday, December 21, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபுத்தாண்டில் ஆசி வேண்டி நாடாளுமன்ற வளாகத்தில் போதி பூஜை

புத்தாண்டில் ஆசி வேண்டி நாடாளுமன்ற வளாகத்தில் போதி பூஜை

2023 புத்தாண்டில் ஆசி வேண்டி நாடாளுமன்ற வளாகத்திலுள்ள ஜய மஹாபோதிக்கு அருகில் விசேடபோதி பூஜை நிகழ்வு இன்று முற்பகல் இடம்பெற்றது.

பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற இந்த பூஜையை கொழும்பு, களுத்துறை பகுதிகளின் தலைமை தேரரும், கோட்டே சுனேத்ராராமாதிபதியுமான வணக்கத்துக்குரிய அலிக்கேவெல சீலானந்த தேரர் நடாத்தினார்.

நாடாளுமன்ற பதில் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற பணியாட்தொகுதி பிரதானியுமான குஷானி ரோஹனதீர, உதவிச் செயலாளர் நாயகம் டிகிரி கே. ஜயதிலக, பாராளுமன்ற திணைக்களங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற செயலகத்தின் பணியாளர்கள் மற்றும் இணைந்த சேவைகளின் பணியாளர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நாடாளுமன்ற பணியாட்களின் பௌத்த சங்கத்தினரால் இந்த ஆசீர்வாத போதி பூஜை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், இதன் நோக்கத்தை தெளிவுபடுத்தும் வகையில் வரவேற்புரையை அதன் தலைவர் ஷாந்த வீரரத்ன நிகழ்த்தினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles