யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதேசத்தில் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் சிறுமி ஒருவரை 2 வருடங்களாக வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
நேற்று (03) பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் இரண்டு கான்ஸ்டபிள்களில் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிள் அந்த காட்சிகளை வீடியோ எடுத்து பின்னர் அதனை காட்டி இரண்டு வருடங்களாக குறித்த சிறுமியை பலாத்காரம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த சிறுமி 16 வயதில் துஷ்பிரயோகத்திற்கு ஆளானதுடன், தற்போது அவருக்கு 18 வயதாகிறது.
சிறுமி திடீரென மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் கடுமையான அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இந்நிலையில், சிறுமியிடம் நடத்திய விசாரணையில், சிறுமி மருத்துவரிடம் அனைத்து விவரங்களையும் கூறியுள்ளார்.
பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின் போது, சிறுமியை முதன்முறையாக பலாத்காரம் செய்த போது எடுக்கப்பட்ட காணொளி பொலிஸ் அதிகாரியின் கைப்பேசியிலிருந்து மீட்கப்பட்டது
நீதிமன்றில் இருந்து பெறப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவின் அடிப்படையில் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.