Sunday, November 17, 2024
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரசியல்வாதிகளின் கொடுப்பனவுகளுக்கு வருமான வரியிலிருந்து விலக்கு

அரசியல்வாதிகளின் கொடுப்பனவுகளுக்கு வருமான வரியிலிருந்து விலக்கு

ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாவுக்கும் அதிகமான மாதாந்த சம்பளம் பெறுபவர்களை இலக்காகக் கொண்டு அரசாங்கம் ஜனவரி மாதம் முதல் தனிநபர் வருமான வரியை நடைமுறைப்படுத்தியது.

எனினும், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆளுநர்கள் மற்றும் மாகாணசபைத் தலைவர்கள் உட்பட குறிப்பிட்ட குழுவினர் இந்த வரிக்கு உட்படவில்லை எனவும், இதனால் குறிப்பிட்ட தரப்பினருக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும் பொது நிர்வாக அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாவுக்கு மேல் சம்பளம் பெறுவதற்கு தகுதியுடையவர்கள், வேறு எந்த நிதி அல்லாத சலுகைகளையும் பெறாதவர்கள் இந்த வரியால் முற்றாக அகப்பட்டுக் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

பொதுவாக சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதாந்தம் மூன்று முதல் நான்கு இலட்சம் ரூபா எரிபொருள் கொடுப்பனவுகள் உட்பட நிதிச் சலுகைகளையும், மாகாண ஆளுநர்கள் மூன்று வாகனங்களுக்கு மாதாந்தம் சுமார் ஏழு இலட்சம் ரூபா எரிபொருள் கொடுப்பனவைப் பெறுவதாகவும், மேலதிகமாக தொலைபேசி கொடுப்பனவுகள் போன்றவற்றைப் பெறுவதாகவும் அவர் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles