நாடு தழுவிய ரீதியில் அனுமதிப்பத்திரம் இன்றி விமான டிக்கெட்டுகளை விற்பனை செய்யும் குழுவொன்று தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் காரணமாக மக்கள் அவதானமாக இருக்குமாறு இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.
உரிமம் இன்றி விமான டிக்கெட்டுகளை விற்பது தண்டனைக்குரிய குற்றமாகும் எனவும், அவ்வாறான நிறுவனங்களிடம் இருந்து விமான டிக்கெட்டுகளை கொள்வனவு செய்வது தவிர்க்கப்பட வேண்டுமெனவும் அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.
இவ்வாறான சட்டவிரோத முகவர் நிலையங்கள் தொடர்பில் தெரிந்தால் தெரிவிக்குமாறும் விமான போக்குவரத்து அதிகார சபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.