வாகனங்களுக்கான சொகுசு வரி இந்த ஆண்டு ஆரம்பத்திலிருந்து அமுலுக்கு வருகிறது.
நிதியமைச்சு இதற்கான வர்த்தமானியை வெளியிட்டுள்ளது.
மறைந்த அமைச்சர் மங்கள சமரவீரவினால் 2019ஆம் ஆண்டு ஒக்டோபர் 31ஆம் திகதி, இந்த வரித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, வர்த்தமானி வெளியானது.
தற்போது அது நடைமுறைக்கு வந்துள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.