Monday, May 26, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின் கட்டண திருத்த யோசனை ஒரு வாரம் ஒத்திவைப்பு

மின் கட்டண திருத்த யோசனை ஒரு வாரம் ஒத்திவைப்பு

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பிலான இறுதி தீர்மானம் அடுத்த வாரம் கூடவுள்ள அமைச்சரவை கூட்டம் வரை பிற்போடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் 2023 ஆம் ஆண்டுக்கான முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நேற்று இடம்பெற்றது.

இதன்போது, மின் கட்டண அதிகரிப்பு தொடர்பிலான யோசனையை விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் கஞ்சன விஜேசேகர முன்வைத்திருந்தார்.

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு உள்ளிட்ட பல தரப்பினரின் எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் இது தொடர்பான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், மின் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பிலான யோசனை மீதான இறுதி தீர்மானம் அடுத்த வாரம் கூடவுள்ள அமைச்சரவை கூட்டம் வரை பிற்போடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles