Tuesday, December 23, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபௌத்த - பாலி பல்கலைக்கழகம் விரைவில் திறக்கப்படும்

பௌத்த – பாலி பல்கலைக்கழகம் விரைவில் திறக்கப்படும்

பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இம்மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் ஆரம்பிக்கப்படும் என பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் நெலுவே சுமனவன்ச தேரர் தெரிவித்துள்ளார்.

பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகம் கடந்த டிசம்பர் மாதம் 19ஆம் திகதி காலவரையின்றி மூடப்பட்டது.

பகிடிவதை மற்றும் பல சம்பவங்களால் பல்கலைக்கழகம் மூடப்பட்டது.

அமைச்சரவையின் பணிப்புரைக்கு அமைய மூன்று பிரதான பௌத்த பீடங்களின் பிரதம பீடாதிபதிகளிடமும் ஆலோசனைகளை பெற்றுள்ளதாக உபவேந்தர் நெலுவே சுமனவன்ச தேரர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலைமை தொடர்பில் விரிவுரையாளர்களுடன் பல சுற்று கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் சுமனவன்ச தேரர் குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைக்கழகத்தின் பொது நிர்வாகப் பணிகள் வழமை போன்று நடைபெற்று வருவதாகவும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தை மீண்டும் திறப்பது தொடர்பான அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles