Sunday, November 17, 2024
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஒரு கோடி ரூபா மின் கட்டண நிலுவை குறித்து கெஹெலிய கூறிய விடயம்

ஒரு கோடி ரூபா மின் கட்டண நிலுவை குறித்து கெஹெலிய கூறிய விடயம்

தனது வீட்டில் மின்சாரக் கட்டணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டமைக்கு மின் கட்டண பட்டியல் சரியாக கிடைக்காமையே காரணம் எனவும், அதை சரியாகப் பெற்றவுடன் மின் கட்டண நிலுவையை செலுத்தச் சென்றதாகவும் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நேற்று (02) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

ஊடகவியலாளர் அமைச்சரிடம் கேட்ட கேள்வி: ‘ஒரு கோடியே இருபத்தெட்டு இலட்சம் ரூபா நிலுவை கொண்ட உங்கள் மின் தொடர்பை இலங்கை மின்சார சபை துண்டிக்காதது ஏன்?

இதற்கு பதிலளித்த அமைச்சர் கூறியதாவது:

‘நான் இருந்த வீட்டின் மின் கட்டண பட்டியல் வேறு ஒருவரின் பெயருக்கு அனுப்பப்பட்டது. எனக்கு அது கிடைக்கவில்லை. நான் 3 பதிவு கடிதங்கள் அனுப்பியுள்ளேன். காரணம் வரிக்கு உட்பட்ட வருமானத்தில் இருந்து கழிப்பதால், பில் என் பெயரில் இருக்க வேண்டும். பில் வேறொருவரின் பெயரில் இருப்பதால் எனது கணக்குகளில் இருந்து அதைக் கழிக்க முடியாது. இதை மாற்ற பதிவேட்டை மூன்று முறை திறுத்த முயற்சித்தேன். அது கடைசி வரை மாற்றப்படவில்லை. அதை மாற்றிய மறுநாளே அபராதம் தவிர அனைத்தையும் செலுத்தினேன். மின்சார சபையில் ஏதோ தவறு இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles