பிரேசில் நாட்டின் புதிய ஜனாதிபதியாக லுலா டி சில்வா பதவி ஏற்றுக் கொண்டார்.
76 வயதான அவர் இரண்டு தடவைகள் ஜனாதிபதியாக இருந்த நிலையில், தற்போது மூன்றாவது முறையாக ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார்.
கடந்த ஆண்டு ஒக்டோபரில் நடைபெற்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ஜெயார் பொல்சொனாராவை அவர் தோற்கடித்தார்.
இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி ஜெயார் பொல்சொனாரோவின் ஆதரவாளர்களால் வன்முறைகள் ஏற்படுத்தப்படலாம் என்று ஐயத்துக்கு மத்தியில், நாட்டில் கடும் பாதுகாப்பு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
அதேநேரம் முன்னாள் ஜனாதிபதி பொல்சொனாரோ நாட்டிலிருந்து வெளியேறி அமெரிக்காவிற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.