நாடாளுமன்றத்தின் 35 அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கடந்த 31ஆம் திகதி ஓய்வு பெற்றதாக நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 60 ஆகக் கட்டுப்படுத்த அரசு தீர்மானித்தது.
அதன்படி நாடாளுமன்றத்தில் உள்ள இந்த குழுவினர் ஓய்வு பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த காலங்களில் இந்த அதிகாரிகளும் ஊழியர்களும் தமது கடமை காலத்தை நீட்டிக்க சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அது தோல்வியடைந்தது.
இது தொடர்பில் நர்தளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, இந்த விடயத்தில் நாடாளுமன்றத்துக்கு சிறப்பு சலுகை வழங்கப்பட்டால் அரச சேவையில் பெரும் குழப்பம் ஏற்படலாம்.
எனவே, நாடாளுமன்ற அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு மட்டும் விசேட சேவை நீடிப்பு வழங்க முடியாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.