Wednesday, November 20, 2024
25.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதாயால் விஷம் ஊட்டப்பட்ட குழந்தை உயிரிழப்பு

தாயால் விஷம் ஊட்டப்பட்ட குழந்தை உயிரிழப்பு

தாயால் விசம் ஊட்டப்பட்ட நிலையில் கொழும்பு ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஐந்து வயது குழந்தை இன்று காலை உயிரிழந்துள்ளது.

லொலுகொட பிரதேசத்தை சேர்ந்த கேஷான் என்ற ஐந்து வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தாய் விசம் அருந்தி குழந்தைகளுக்கும் கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், சந்தேக நபரான தாய் ஆபத்தான நிலையில் வட்டுப்பிட்டியால வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மற்றைய எட்டு வயது குழந்தையும் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles