சீனாவில் கொரோனா நோயாளிகள் வேகமாகப் பதிவாகி வருவதால், அந்நாட்டில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
காய்ச்சல், சளி போன்ற நோய்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளின் தேவை அதிகரித்துள்ள நிலையிலேயே இந்த மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்த நிலைமையை கருத்திற் கொண்டு வெளிநாடுகளில் வாழும் தமது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஊடாக சில மருந்துகளை கொண்டு வர சீன மக்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தென் கொரியா – ஹனாம் நகரில் ஒரே நேரத்தில் 4,760 டொலர்கள் மதிப்பிலான மருந்துப் பொருட்களை சீன நபர் ஒருவர் வாங்கும் செய்தி வெளியாகியுள்ளது.