வாகன சாரதி அனுமதி அட்டையிலும் இந்த ஆண்டு QR குறீயிடு அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அதன் விரிவாக்கல் பிரிவின் ஆணையாளர் குசலானி டி சில்வா இந்த தகவலை வழங்கியுள்ளார்.
இதன்படி தற்போது அனுமதி அட்டையை கொண்டிருப்பவர்கள், அதனை புதுப்பிக்கும் போது புதிய QR குறியீடு பெற்றுக் கொடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
புதிதாக விண்ணப்பிக்கின்றவர்களுக்கு QR குறியீட்டுடனேயே அனுமதியட்டை வழங்கப்படும்.
வாகன சாரதிகளின் விபரங்களுடன், வீதி ஒழுங்கு மீறல்கள் போன்றவற்றை உள்ளடக்கியதாக இந்த QR குறியீடு அமையும் என்று தெரிவிக்கப்படுகிறது.