சமூக நலன்புரி நலன்கள் சட்டத்தின் கீழ் உதவித்தொகை கோரி விண்ணப்பித்த குடும்பங்களின் கணக்கெடுப்பின் போது தமது உறுப்பினர்கள் பல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாக அகில இலங்கை சுதந்திர கிராம அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பணி முதன்மையாக சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக அதன் பிரதம செயலாளர் ஜகத் சந்திரலால் குறிப்பிட்டார்.
தொழிற்சங்க நடவடிக்கையின் ஊடாக மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகளில் இருந்து விலகியதன் காரணமாக அதிகாரிகள் தமது உறுப்பினர்களுக்கு வேலைகளை திணிப்பதாக அகில இலங்கை சுதந்திர கிராம அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
சனத்தொகை கணக்கெடுப்பை மேற்கொள்வதற்கு எவ்வித வசதிகளும் வழங்கப்படாமல் அதிகாரிகள் தமது உறுப்பினர்களுக்கு அழுத்தங்களை பிரயோகித்து வருவதாக அகில இலங்கை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் தெரிவித்துள்ளது.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் தவறான தகவல்கள் பதியப்பட்டால், அந்த அதிகாரிகளுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படும் என்ற சட்டத்தில் உள்ள சரத்து உடனடியாக நீக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.