Friday, July 18, 2025
29.5 C
Colombo
செய்திகள்உலகம்இரு ஹெலிகொப்டர்கள் மோதி விபத்து - நால்வர் பலி

இரு ஹெலிகொப்டர்கள் மோதி விபத்து – நால்வர் பலி

அவுஸ்திரேலியாவின் கோல்ட் கொஸ்ட் அருகே இரண்டு ஹெலிகொப்டர்கள் வானில் மோதி விபத்துக்குள்ளானது.

அவற்றில் பயணித்த நால்வர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கோல்ட் கொஸ்ட்டின் பிரதான கடற்கரைக்கு அருகில் உள்ள மணல் திட்டில் விமானங்களின் சிதைவுகள் வீழ்ந்துள்ளது.

இன்று (02) பிற்பகல் இரண்டு மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தின் போது இரண்டு ஹெலிகொப்டர்களில் 13 பேர் பயணித்துள்ளதாகவும், அவர்களில் 4 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் 3 பேர் படுகாயமடைந்ததாகவும், 6 பேர் லேசான காயமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles